search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தயார் நிலை ஒத்திகை
    X

    கோப்பு படம் 

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தயார் நிலை ஒத்திகை

    • டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் நடந்தது
    • கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும்

    நாகர்கோவில்:

    சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் உருவாகி உள்ள கொரோனா பி.எப்.7 வைரஸ் பரவல் இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொடர்பான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மருத்துவக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது. அடுத்த 6 மாதத்துக்கு தேவையான கொரோனா பரிசோதனை கருவிகளை முன்கூட்டியே வாங்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா வார்டுகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் போன்ற வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்தது. அதன்படி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இன்று கொரோனா ஒத்திகை நிலை பயிற்சி நடந்தது. டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் கொரோனா வார்டுகள் ஆய்வு செய்யப்பட்டன. நோயாளிகள் வந்தால் சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. மருத்துவமனை கண்காணிப்பாளர் அருள் பிரகாஷ் மற்றும் டாக்டர்கள் இதில் பங்கேற்றனர்.

    Next Story
    ×