என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![நாகர்கோவிலில் இன்று மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் நாகர்கோவிலில் இன்று மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/14/1836201-13.webp)
கலெக்டர் ஸ்ரீதர் சிறுவனுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கிய காட்சி.
நாகர்கோவிலில் இன்று மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கலெக்டர்-மேயர் வழங்கினர்
- இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை.
நாகர்கோவில்:
பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை இன்று வழங்கப்பட்டது.
நாகர்கோவில் செட்டி குளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி யில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மேயர் மகேஷ், முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, ஆணை யாளர் ஆனந்த மோகன், சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் மீனாட்சி, துணை மேயர் மேரி பிரின்சி லதா, தி.மு.க. மாநகர செய லாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாணவ- மாணவிகளுடன் குடற்புழு நீக்க நாள் உறுதி மொழியை கலெக்டர் மற்றும் அதிகாரி கள் எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-
வளரும் குழந்தைகளுக்கு குடற்புழு இருந்தால் உடல் வளர்ச்சி குறைபாடு, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதை தடுக்க குடற்புழு தடுப்பு மாத்தி ரைகள் விநியோகம் செய்யப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்க ளில் இந்த மாத்திரைகள் வழங்கப்படு கிறது. மாணவ- மாணவிகள் அனைவரும் இந்த மாத்திரையை உட்கொள்ள வேண்டும்.
20 முதல் 30 வயதுக்குட் பட்ட பெண்களுக்கு குடற்புழு இருந்தால் ரத்த சோகை ஏற்பட்டு எடை குறைவான குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் வகை யில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்படுகிறது.
குமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5 லட்சத்து 58 ஆயிரத்து 76 பேருக்கும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் 75 ஆயிரத்து 43 பேருக்கும் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரையை உட்கொள்வதால் எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகள் மாத்திரை உட்கொண்டதை உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.