என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை முன்பு மயங்கி கிடந்த முதியவர் சாவு தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை முன்பு மயங்கி கிடந்த முதியவர் சாவு](https://media.maalaimalar.com/h-upload/2023/02/07/1832726-dead-body.webp)
கோப்பு படம்
தெங்கம்புதூர் டாஸ்மாக் கடை முன்பு மயங்கி கிடந்த முதியவர் சாவு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பலன் அளிக்கவில்லை
- உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
தெங்கம்புதூர் டாஸ் மாக் கடை முன்பு கடந்த மாதம் 31-ந்தேதி 70 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை யில் இருந்த முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தெங்கம்புதூர் கிராம நிர்வாக அதிகாரி சரஸ்வதி நேற்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாய்லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து இறந்து போன முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ற கோணங்க ளில் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்து போன முதிய வரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது.