என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தக்கலை அருகே விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை தக்கலை அருகே விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/01/10/1819646-poison1.webp)
கோப்பு படம்
தக்கலை அருகே விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.
- இவர் பெற்றோர் அறிவுரை கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே பருத்தி கோட்டை விளை காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.
இவரை பெற்றோர் அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜின் பிரகாஷ் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தாய் மேரி விஜிலா இதை பார்த்து அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை விஜின் பிரகாஷ் உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக தாய் மேரி விஜிலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.