என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆரல்வாய்மொழியில் பஸ் மோதி பட்டதாரி பெண் சாவு
- கல்லூரியில் படிக்கும் சகோதரியை பார்க்க தந்தையுடன் வந்த போது விபத்தில் பலியான சோகம்
- டிரைவர் மீது போலீசார் வழக்கு
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சை இறச்சகுளம் சாஸ்தா நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் ஓட்டிச் சென்றார். பெரு விளையை சேர்ந்த பத்ம குமார் கண்டக்டராக பணி யாற்றினார். பஸ்சில் 50- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
ஆரல்வாய்மொழி பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சாலையோர கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள், கார் மற்றும் ஆட்டோ மீது பஸ் அடுத்தடுத்து மோதியது.
இதையடுத்து பொது மக்கள் சிதறி ஓடினார்கள்.அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் நெல்லை மாவட்டம் மூலக்கரைபட்டியைச் சேர்ந்த ஜெயபால் (வயது 46) தனது மகள் மகராசி (23)யுடன் வந்தார். அவர்கள் மீதும் தாறுமாறாக ஓடிய பஸ் மோதியது. இதில் அவர்கள் இருவ ரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகராசி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார். தன் கண் முன்பு மகள் இறந்ததை பார்த்து ஜெயபால் கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் விரைந்து செயல்பட்டு படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். மகராசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஜெயபால் கொடுத்த புகாரின் பேரில் பஸ் டிரைவர் சொக்கலிங்கம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஜெயபாலின் 3-வது மகள் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். அவரை பார்ப்ப தற்காக தனது 2-வது மகள் மகராசியுடன் ஜெயபால் வந்துள்ளார். அப்போது தான் விபத்தில் சிக்கி மகராசி பலியாகி உள்ளார்.
சகோதரியை பார்க்க வந்த இடத்தில் மகராசி பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படு த்தி உள்ளது. பலியான மகராசியின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்