search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது
    X

    கோப்பு படம் 

    குமரி மாவட்டத்தில் 95 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது

    • பொதுமக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
    • குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26-ந் தேதி அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெ றுகிறது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணி அளவில் நடத்திட வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.

    அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை, அதிகாரிகள் இக்கிராம சபைக் கூட்டத்தில் வெளியிட வேண்டும்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×