என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சொத்தவிளையில் காவலாளி கொலை
- கோர்ட்டில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
- சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தனியார் நிறுவன காவலாளி.
இவர் அவ்வப்போது புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன்,அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ராதா, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த நிலையில் சொத்தவிளை கடற்கரை சாலையில் முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக 17-ந் தேதி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ் பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முருகன் உடல் சற்று அழுகிய நிலையில் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் இருந்தது. இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முருகன் உடலில் மார்பு, கை, வயிறு என 5 இடங்களில் ஆழமான அளவில் கத்தி குத்துபட்டு முருகன் இறந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த முருகனை அவரது நண்பரான பீச் ரோட்டைச் சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பவர் தான் கடைசியாக அழைத்துச் சென்றது தெரிய வந்தது. எனவே அவர் தான் கொலையாளியாக இருக்க லாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இந்நிலையில் குமரகுரு சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
இந்த நிலையில் அவர் நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இது பற்றி சுசீந்தி ரம் போலீசாருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே முருகன் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலைக்கான காரணம் என்ன? என்பதெல்லாம் தெரிய வரும் என போலீசார் கருதுகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்