என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருவட்டார் அருகே வீட்டுக்குள் ஓட்டல் மேலாளர் பிணமாக கிடந்தது எப்படி?
- அழுகிய உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை
- அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரிகிறது.
கன்னியாகுமரி:
திருவட்டாரை அடுத்த ஆற்றூர் புல்லாணி விளையை சேர்ந்தவர் ராஜேஷ், ஓட்டல் மேலாளர்.
இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 19 வயது மகள், 14 வயது மகன் உண்டு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேசுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டுக்கு ராஜேசின் மனைவி சென்று விட்டார். அதன்பிறகு தாயார் தங்கத்துடன் ராஜேஷ் வசித்து வந்தார்.
பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக வேலை பார்த்து வந்த ராஜேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்த பின்னர் சரியாக வேலைக்குச்செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமை யானார்.
இந்த நிலையில் அவரது தாயார் தங்கத்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருநந்திக்கரையில் உள்ள சகோதரி வசந்தாவின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதனால் ராஜேஸ் மட்டும் வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. இது தொடர்பாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் என்பவர், தங்கத்துக்கு தகவல் கொடுத்தார்.
அதனையடுத்து தங்கம் வீட்டுக்கு வந்து பார்த்த போது, வீட்டின் முன்புற அறையில் உள்ள சோபா வில் ராஜேஸ் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வரு கிறார். ராஜேசை கடந்த 15-ந்தேதி மாலை வீட்டில் வைத்து பார்த்ததாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சசிகுமார் கூறியுள்ளார். எனவே அவர் இறந்து 5 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என தெரி கிறது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.