என் மலர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் விபத்தில் சிக்கி 2 பேர் பலியானது எப்படி?
- லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு
- நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் ஜோசப் பிரகாஷ். இவரது மகன் ஜிம் ரெஜினால்ட் (வயது 21).
இவர், சென்னையில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.வெட்டூர்ணிமடம் பர மேஸ்வரன் தெருவை சேர்ந்தவர் வின்சென்ட் இவரது மகன் கிரேசன் டேனியல் (23) என்ஜினீயரிங் படித்துவிட்டு வேலை தேடி வந்தார்.
இவர்கள் இருவரும் நண்பர்கள். நேற்று இருவரும் ஞாலம் பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்க சென்றனர். கால்வாயில் குளித்துவிட்டு இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தனர். ஆலம்பாறை பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜிம் ரெஜினால்ட் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கிரேசன் டேனியலை மீட்டு சிகிச்சைக்காக ஆசா ரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவரும் பரிதாபமாக இருந் தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி னார்கள்.
பிணமாக கிடந்த ஜிம் ரெஜினால்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.கிரேசன்டேனியல் உடலும் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விபத்து பற்றி தகவல் தெரிந்ததும் 2 பேரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அங்கு திரண்டனர்.
விபத்து குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் வாலிபர்கள் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பலியான ஜிம் ரெஜினால்டு,கிரேசன் டேனியல் இருவரும் மோட் டார் சைக்கிளில் சென்று கால்வாயில் குளித்து விட்டு அந்த பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலையில் உள்ள சிறிய வளைவில் வரும்போது எதிரே அதிவேகமாக வந்த லாரி மோதி இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக லாரி டிரைவர் திருவனந்தபுரத்தை சேர்ந்த திலீப்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விடுமுறை யில் ஜிம் ரெஜினால்ட் ஊருக்கு வந்த நேரத்தில் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.