என் மலர்
உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு ரெயில் சேவை மாற்றத்தை தற்காலிகமாக நிறுத்த வேண்டும்
- விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
- பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும்.
நாகர்கோவில்:
தெற்கு ரெயில்வேக்கு விஜய்வசந்த் எம்.பி. அனுப்பி யுள்ள கோரிக்கையில் கூறி யிருப்பதாவது:-
தென் தமிழகத்தில் இரட்டை ரெயில்பாதை அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இந்த பணி களுக்காக அவ்வப்போது தென்மாவட்ட ரெயில் சேவையில் ரெயில்வே நிர்வாகம் சில மாற்றங்களை செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழர் களின் முக்கிய பண்டிகை யான பொங்கல் திருவிழா நெருங்கி வரும் நிலையில் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக மதுரை-கன்னியாகுமரி வழித்தடத்தில் இயக்கப்படும் ஒரு சில ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள தோடு பல ரெயில்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு செல் லும் பயணிகளுக்கு இந்த ரெயில் சேவை மாற்றம் மிகுந்த சிரமத்தை ஏற்ப டுத்தும் எனவே, இரட்டை வழிப்பாதை அமைக்க மேற்கொள்ளப்படும் ரெயில் சேவை மாற்றத்தை தள்ளி வைக்க வேண்டும்.
இதன் மூலம் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வோரின் பயணம் இலகுவாகும். மேலும் வர்த்தக ரீதியாக செல்லும் வணிகர்களின் நலனையும் கருத்தில் கொண்டு ரெயில் சேவை மாற்றத்தை பொங்கல் விடுமுறைக்கு பிறகு நடை முறை படுத்தவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.