search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தளம் பகுதியில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்
    X

    புத்தளம் பகுதியில் உப்பு உற்பத்தி பணி தீவிரமாக நடந்து வருவதை படத்தில் காணலாம் 

    புத்தளம் பகுதியில் உப்பு உற்பத்தி பணி தீவிரம்

    • ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 5 மாதங்கள் உப்பு உற்பத்தி பணி
    • உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே புத்தளம், மேலப்புத்தளம், கல்விளை, ஆண்டிவிளை, சுவாமிதோப்பு ஆகிய பகுதிகளில் ஏராளமான உப்பு உற்பத்தியாளர்கள் வசித்து வருகிறார்கள்.

    இவர்கள் ஆண்டுதோறும் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய 5 மாதங்கள் உப்பு உற்பத்தி பணியில் ஈடுபடுவார்கள். அப்போது இப்பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் உப்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் உப்பு உற்பத்திக்காக நிலத்தினை தயார் செய்து உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    தற்போது அப்பகுதியில் உப்பு விளைந்து உள்ளது. அதனை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் விற்பனைக்காக வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×