search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தாவுக்கு மேயர் மகேஷ் கண்டனம்
    X

    மேயர் மகேஷ் 

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தாவுக்கு மேயர் மகேஷ் கண்டனம்

    • 1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல.
    • 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார்.

    நாகர்கோவில்:

    தி.மு.க. குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர் கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வெள்ளிமலை ஆசிரம சுவாமி சைதன்யானந்தா மகராஜ் மண்டைக்காடு கோவிலில் நடைபெறுகின்ற சமய சொற்பொழி தொடர் பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லினுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். அவருக்கு எனது கண்டனத்தை தெரி வித்துக் கொள்கிறேன். 1982-ம் ஆண்டு மண்டைக் காட்டில் ஏற்பட்ட கலவரம் மதத்தின் அடிப்படையில் ஏற்பட்டது அல்ல. அது ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டது. இப்போது கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக உள்ளது.

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 20 மாதத் தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வழிகாட்டுதலின் பேரில் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களும் குடமுழுக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதிக நிதியை தமிழக முதல்வர் குமரி மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இந்து சேவா சங்கம் என்ற பெயரில் அறநிலை யத்துறை கோவில்க ளில் உள்ள கட்டிடங் களை கையகப்படுத்தி கோவிலில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் இந்து சேவா சங்கம் நடத் தியது என கூறி வந்தனர். புகாரின் பேரில் தமிழக முதல்வர் நிகழ்ச்சிகளை அறநிலையத்துறை நடத்தும் என அறிவித்துள்ளார்.

    மண்டைக்காட்டில் ஹைந்தவ சேவா சங்கம் நடத்தும் சமய மாநாட்டில் உள்ள போஸ்டரில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் பெயரை போட்டுள்ளனர். இதனால் இந்து சமய மாநாடா? அரசியல் மாநாடா? என்று தெரிந்து கொள்ள வேண் டும். மார்ச் 5-ந் தேதி மாசி கொடைவிழா சிறப்பாக நடக்கும்.

    நிகழ்ச்சிக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வருகை தருகிறார். அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டு விழா சிறப்பாக நடக்கும். 8-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகிறார். உங்கள் பேச்சை குறைத் துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×