search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவர் சாவில் மர்மம்
    X

    சுமித்திரன்

    களியக்காவிளை அருகே தற்கொலை செய்த கல்லூரி மாணவர் சாவில் மர்மம்

    • போலீசில் பெற்றோர் பரபரப்பு புகார்
    • முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும், மாணவரின் பெற்றோரும் கோரிக்கை

    கன்னியாகுமரி:

    களியக்காவிளை அருகே உள்ள படந்தாலு மூடு பகுதியில் செயல்பட்டு வரும் கிரேஸ் நர்சிங் கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியை சேர்ந்த சுமித்திரன் (வயது 19) படித்து வந்தார்.

    கல்லூரி விடுதியில் தங்கியிருந்த இவர் நேற்று மர்மமான முறையில் விடுதி யின் மேல் மாடியில் தூக்கில் பிணமாக தொங்கி னார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    களியக்காவிளை போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதணைக்காக குழித்துறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்த சம்ப வம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மாணவரின் சாவு குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் நேற்று மாலை கல்லூரிக்கு வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த னர்.

    அதில்,சுமித்திரன் சாவில் மர்மம் உள்ளது. இதுகுறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.கல்லூரி நிர்வாகம் தரப்பில் மாண வனுக்கு ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? அல்லது மாணவருக்கு அபராதம் எதுவும் விதிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோர் குறிப்பிட்டு உள்ளனர்.

    வேறு ஏதாவது மோதலில் தாக்கப்பட்டு சுமித்திரன் இறந்திருக்கலாமா? அதன் பின்னர் அவரை தூக்கில் தொங்க விட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது.

    3-வது மாடியில் இருந்து சிறு நைலான் கயிறு மூலம் மாணவர் சுமித்ரன் குதித்து தற்கொலை செய்திருந்தால் கயிறு அறுபட்டு சுமித்திரன் கீழே விழ வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. எனவே இறந்த அவரை, யாரோ தூக்கி வந்து கயிற்றில் தொங்க விட்டது போல் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சந்தேகங்களை எழுப்பி உள்ளனர்.

    மேலும் மாணவர் தங்கியிருந்த விடுதியில் இரவு 1 மணிக்கு மேல் கஞ்சா வியாபாரிகள் உள்ளே செல்வதாகவும் அந்த ஊர் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து முறையாக போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ஊர் மக்களும் மாணவரின் பெற்றோரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×