என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொன் ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் தேசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி
- 1200 வீரர்,30 வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்
- வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில்:
இந்திய பளு தூக்கும் சங்கம் நடத்தும் தேசிய சாம்பியன்ஷிப் பளு தூக்கும் போட்டி நாகர்கோவில் பொன் ஜெஸ்லி பொறி யியல் கல்லூரியில் நேற்று தொடங்கியது. வருகிற ஜனவரி 7-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
யூத், ஜூனியர், சீனியர் ஆகிய 3 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக உடல் எடை அடிப்படையில் 30 பிரிவுகளாக போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டி யில் அனைத்து மாநிலங்க ளையும் சேர்ந்த 1200 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் போட்டிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அகில இந்திய பளு தூக்கும் சங்க தலைவர் சகாதேவ் யாதவ், அகில இந்திய துணை தலைவரும், தமிழ்நாடு பளு தூக்கும் சங்க தலைவருமான பொன் ராபர்ட்சிங், அகில இந்திய பொது செயலாளர் ஆனந்த கவுடா மற்றும் மாநில் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து போட்டிகள் நடந்தன. இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறு வார்கள். எனவே முன்னணி வீரர்கள், சாதனையாளர்கள், சர்வதேச வீரர் வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொள் கின்றனர்.