search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் பதுங்கி இருந்த வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
    X

    நாகர்கோவில் வாலிபர் வீட்டில் சோதனை நடத்தி விட்டு வெளியே வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்.

    நாகர்கோவிலில் பதுங்கி இருந்த வாலிபர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

    • செல்போனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்
    • கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் தூத்துக் குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லி யில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோ விலுக்கு வந்தனர். அவர் கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்ற னர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

    இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.

    Next Story
    ×