என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கியது
- கலெக்டர்-மேயர் பங்கேற்று ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்
- ஏழை,எளிய மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்
நாகர்கோவில்:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து ரேஷன் கடை ஊழியர்கள் மூல மாக கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கப் பட்டது. தொடர்ந்து இன்று முதல் ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்க ப்படுகிறது.
நாகர்கோவில் மறவன் குடியிருப்பில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.மாநகராட்சி மேயர் மகேஷ் பொங்கல் தொகுப்பு விநியோகத்தை தொடங்கி வைத்தார்.
துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாவட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி, அகஸ்தீஸ்வரம் வழங்கல் அதிகாரி ஜெகதா, கவுன்சிலர்கள் சோபி, நவீன்குமார், சிஜி, தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சந்திர சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து பொது மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. விழாவில் மேயர் மகேஷ் பேசுகையில், ஏழை,எளிய மக்கள் அனைவரும்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசுத்தொகை அறிவித்து உள்ளார். ரூ.ஆயிரம் ரொக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும்.முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏராளமான மக்கள் திட்ட ங்களை செயல்படுத்தி வருகிறார்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றார்.
கலெக்டர் அரவிந்த் கூறுகையில், மாவட்டம் முழுவதும் 5 லட்சத்து 74 ஆயிரத்து 675 ரேஷன் கார்டுதாரர்களுக்கு 774 ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. தினமும் காலையில் 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் என பொங்கல் பரிசு தொகை வழங்க ஏற்கனவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
டோக்கன் அடிப்படையில் பொதுமக்கள் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று கொள்ளலாம் என்றார்.
பொங்கல் பரிசு தொகுப்பு இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து ரேஷன் கடைகளில் இன்று காலையிலேயே கூட்டம் அலைமோதியது. ரேஷன் கடை ஊழியர்கள் பொங்கல் பரிசு தொகையை பொது மக்களுக்கு வழங்கினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்