என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று 2 தங்கத் தேர் பவனி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று 2 தங்கத் தேர் பவனி](https://media.maalaimalar.com/h-upload/2022/12/18/1808460-our-lady-of-ransom-shrine.webp)
இன்று காலையில் நடந்த தங்க தேர் பவனியையும், அதில் பங்கேற்ற பக்தர்களையும் படத்தில் காணலாம்.
தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் இன்று 2 தங்கத் தேர் பவனி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- திரளான மக்கள் பங்கேற்பு
- திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் கன்னியா குமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலமும் ஒன்று. இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த9-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறை யுரை, திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனை, ஜெபமாலை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலையில் பழைய கோவிலில் திருப்பலியும் அதைத்தொடர்ந்து 6.15 மணிக்கு அஞ்சு கூட்டுவிளை இறைமக்கள் சிறப்பித்த திருப்பலி நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் காலை 8 மணி முதல் 9 மணி வரை திருஇருதய ஆண்டவர் பீடத்தில் நற்கருணை ஆராதனையும் 10.30 மணிக்கு நோயாளி களுக்கான திருப்பலி யும் நடந்தது. கேசவன் புத்தன்துறை பங்குத்தந்தை லாரன்ஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். இதனை தூய அடைக்கல அன்னை சகோதரிகள் சிறப்பித்தனர். மாலையில் சிறப்பு மாலை ஆராதனை நடந்தது. இதனை பங்குப் பேரவையினர் சிறப்பித்தனர். இரவு 8 மணிக்கு வாண வேடிக்கையும், இரவு 9 மணிக்கு புனிதசூசையப்பர் தங்கத் தேர்ப்பவனியும் நடைபெற்றது. திருத்தலம் முன்பு இருந்து புறப்பட்ட சூசையப்பர் தேர்4ரத வீதிகள் வழியாக பவனி வந்து அதிகாலையில் நிலைக்குநின்றது.
10-ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தேர் திருப்பலியும், காலை 6 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலியும் நடந்தது. பங்கு மக்கள், குமரிப்பகுதி வாழ் மக்கள், வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வாழும் குமரி மக்கள், திருப்பயணிகள் ஆகியோர் இதனை சிறப்பித்தனர். காலை 8 மணிக்கு ஆங்கில திருப்பலி நடந்தது காலை 10 மணிக்கு மாதா, சூசையப்பர் ஆகிய இரு தங்கத் தேர்ப்பவனி நடந்தது. இதில் விஜய் வசந்த் எம். பி., தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. உள்பட திரளான மக்கள் கலந்து கொண்டனர். காலை 10.30 மணிக்கு மலையாளத் திருப்பலியும் பகல் 12 மணிக்கு தமிழில் திருப்பலியும் நடந்தது. மாலை 5 மணிக்கு இரு தங்கத்தேர்களும் 4 ரத வீதிகள் வழியாக பவனி வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. வழிநெடுகிலும் மக்கள் மாதாவுக்கு மாலை அணிவித்து காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்தி னார்கள். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்கம், நற்கருணை ஆசிர் போன்றவை நடைபெறு கிறது.
திருவிழாவுக்கான ஏற் பாடுகளை கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர், இணைப்பங்கு தந்தையர்கள் பங்குப் பேரவை துணைத்தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொ ருளாளர் தீபக் இணை பங்கு தந்தையர்கள் மேக்சன், ஜான் போஸ்கோ, சேவியர் அருள்நாதன் மற்றும் பங்குப்பேரவையினர், அருட் சகோதரிகள், அனைத்து அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.