என் மலர்
உள்ளூர் செய்திகள்
இயலாக் குழந்தைகளின் நலன் காக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்
- கலெக்டர் அரவிந்த் தகவல்
- இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கன்னியாகுமரி மாவட்டத் தில் 2956 மாற்றுத்திறன் குழந்தைகள் உள்ளனர். இந்த மாற்றுத்திறன் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இயலாக் குழந்தைகள் பள்ளிக்கு வருவதில் ஏற்ப டும் சிரமங்களை தவிர்ப்ப திலிருந்து அவர்கள் கற்கும் திறன் அதிகரிக்க பல்வேறு ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரு கிறது.
குறைவான பாதிப் பினை உடைய 2492 மாற்றுத்திறன் குழந்தைகள் முறையான பள்ளிகளில் சேர்க்கபட்டு சிறப்பு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் அதிகமான பாதிப்பினை உடைய மாற்றுதிறன் குழந்தைகளைப் பராம ரிப்பதற்கு போதிய வசதி யில்லாததாலும், குடும்ப சூழ்நிலையாலும் பெற் றோர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் உள்ளடக்கிய கல்வி மையங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறன் கொண்ட குழந் தைகளுக்கு பயிற்சியும், சிகிச்சையும் தருவதற்கு அவர்களின் வீடுகளுக்கே சிறப்பாசியர்கள் முற்றும் இயன்முறை மருத்துவர்கள் சென்று வருகின்றனர். வீட்டு மட்டத்தில் பயிற்சி பெறும் 262 குழந்தைகளின் உடல் நலம், மனநலம், அறிவு வளர்ச்சி போன் றவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தை களுக்கு முறையான மதிப்பீடு செய்து அவர்க ளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் வழங்க தேர்வு செய்தல், தேசிய அடையாள அட்டைகள் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை வழங்குதல், பேருந்து, ரெயில் பயண அட்டை வழங்குதல், அடையாள அட்டை புதுப்பித்தல், மருத்துவ உதவிகள் மற்றும் சிறப்புத் தேவைகளை கண்டறிதல் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவித் தொகை பெறுதல் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் பயனாளி களை கண்டறிந்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்.
வட்டார வள மையம் வாரியாக ராஜாக்கமங்க லத்தில் 31-ந்தேதி ராஜாக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி, தக்கலைக்கு பிப்ரவரி 1-ந்தேதி தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி, மேல்புறத்திற்கு 3-ம் மேல்புறம் அரசு உயர்நிலைப் பள்ளி,அகஸ்தீஸ்வரத்திற்கு 7-ந்தேதி நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி, திருவட்டாருக்கு 10-ந்தேதி திருவட்டார் அரசு உயர் நிலைப் பள்ளி, தோவாளைக்கு 14-ந்தேதி இறச்சகுளம் அரசு உயர்நிலைப் பள்ளி, கிள்ளியூருக்கு 15-ந்தேதி கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி, முஞ்சிறைக்கு, 17-ந்தேதி முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளி, குருந் தன்கோடுக்கு பிப்ரவரி 21-ந்தேதி கடியப்பட்டணம் இருப்பு மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாம்களை சுகாதாரத் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இணைந்து நடத்த உள்ளன.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.