என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 50 வார்டுகளில் ஆய்வு நிறைவு பெற்றுள்ளது
- மேயர் மகேஷ் தகவல்
- 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் மேயர் மகேஷ் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று 33-வது வார்டுக்கு உட்பட்ட தொல்லவிளை, குருசடி, மேலச்சூரங்குடி பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது மூவேந்தர் நகர் பகுதியில் செயல்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை பார்வையிட்ட அவர் அதன் விவரங்களை அதிகாரியிடம் கேட்டறிந்தார்.
மேலும் 33-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாலைகள் மிக மோசமான நிலையில் இருந்தது. அந்த சாலைகளை சீரமைக்கவும் பொதுமக்கள் மேயரிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்த மேயர் மகேஷ் அதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வார்டுகளிலும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது சாலை சீரமைப்புக்கு ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளுக்கும் எந்த ஒரு பாகுபாடும் இன்றி நிதி சரிவர பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோ வில் மாநகரப் பகுதியிலுள்ள 52 வார்டுகளில் என்னென்ன வளர்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது குறித்து நானே நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
இன்று வரை 50 வார்டுகளில் ஆய்வு முடிவு பெற்றுள்ளது. இன்னும் எனது வார்டான 4-வது வார்டு மற்றும் 5-வது வார்டு மட்டும் ஆய்வு பணியை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஆய்வு பணி நிறைவடையும். மாநகர வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்பதை முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவ டிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின் போது மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர் ஜவகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்