search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பாக செயல்படும் துறைகளை பாராட்டும் போது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்
    X

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசென்று தரிசனம் செய்ய வருகை புரிந்தபோது எடுத்த படம் 

    சிறப்பாக செயல்படும் துறைகளை பாராட்டும் போது குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும்

    • தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
    • புதுவையில் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

    கன்னியாகுமரி:

    தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்குசென்று தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    தென்பகுதிக்கு வரும் போது தாய் வீட்டிற்கு வருவது போன்று உற்சாகத்துடன் வருவேன். நான் தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணைநிலை கவர்னராக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் என்னுடைய கவனம் இருக்கும்.

    தமிழகத்தில் எவ்வாறு சிறப்பாக புயலை எதிர் கொண்டோமோ அது போல் புதுவையிலும் புயலை எதிர்கொள்ளும் வகையில் மிகச் சிறப்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டிருந்தது.

    தி.மு.க.வில் பெண்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறதா என்பது பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை. சமீபத்தில் சென்னை மேயர் காரில் தொங்கிக் கொண்டு சென்றதை பார்த்திருப்பீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுவதாக தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்ட போது, எந்த துறை சிறப்பாக செயல்பட்டாலும் அதனை பாராட்ட வேண்டியது கடமை தான். அதே நேரத்தில் குறைகளை சுட்டிக் காட்ட வும் வேண்டும் என்றார்.

    Next Story
    ×