என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இரணியல் அருகே அரசு பஸ் மோதி மருத்துவ பிரதிநிதி பலி
- மற்றொரு விபத்தில் விவசாயி சாவு
- தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இரணியல்:
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை கீழத் தெருவை சேர்ந்தவர் ஆபத்துகாத்தபிள்ளை (வயது 52). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் நிறுவனத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் நாகர்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த முருகன் (65) என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் வேலை விஷயமாக நேற்று தக்கலை பகுதிக்கு வந்து விட்டு இரவு நாகர்கோவில் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை முருகன் ஓட்டினார். ஆபத்து காத்தபிள்ளை பின்னால் அமர்ந்திருந்தார்.
மொபட் வில்லுக்குறி பாலம் தாண்டி அங்குள்ள பெட்ரோல் பங்க் எதிரே சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் மொபட்டை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்கம் மொபட்டில் உரசியது. இதில் மொபட்டில் சென்ற இருவரும் கீழே விழுந்தனர். பின்னால் அமர்ந்திருந்த ஆபத்து காத்தபிள்ளை ரோட்டில் விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய ஆபத்துகாத்த பிள்ளை சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து முருகன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் கொல்லங்கோடு ஆறுகோடு பகுதியை சேர்ந்த சிந்து குமார் (52) என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
இரணியல் அருகே உள்ள மாங்குழி பகுதியை சேர்ந்த வர் வின்சென்ட் (65), விவ சாயி. இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியே சென்று விட்டு மதியம் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திங்கள் நகர் ரவுண்டானா தாண்டி ராதாகிருஷ்ணன் கோவில் ஜங்ஷன் அருகே வரும்போது பின்னால் வேகமாக வந்த மினி பஸ் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட வின்சென்ட் படுகாயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியி லேயே வின்சென்ட் பரிதாப மாக இறந்தார். இதுகுறித்து அவரது சகோதரர் தேவ சகாயம், இரணியல் போலீ சில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய மினி பஸ் டிரைவர் கொக்கோடு வலியவிளை வைகுண்ட குமார் (29) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்