search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவட்டார்-மேல்புறம் யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
    X

    திருவட்டார்-மேல்புறம் யூனியன்களில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

    • ரூ.20 லட்சம்‌ மதிப்பில்‌ கட்டப்பட்டு வரும்‌ ஒர்கிங்‌ சென்டர்‌ கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
    • உதவி செயற்பொறியாளர்கள்‌, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌, பொதுமக்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

    கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×