என் மலர்
உள்ளூர் செய்திகள்

முட்டத்தில் 1000 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்
- வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
- ரேஷன் அரிசி உடையார்விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.
கன்னியாகுமரி :
தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் முட்டம் கடற்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தே கத்திற்கிடமாக கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் வேகமாக வந்தது. அதனை வட்ட வழங்கல் அதிகாரி தடுத்து நிறுத்திய போது, வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனை செய்த போது அதில் நூதன முறையில் மறைத்து சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்துவது தெரிய வந்தது.
அதனை காருடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு குடோனில் ஒப்படைக்கப் பட்டது.
மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம், வட்டவழங்கல் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
Next Story






