search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் 17 நாட்களில் சாலை விபத்துகளில் 20 பேர் பலி - அதிவேகம், போதையில் அதிக விபத்து
    X

    குமரியில் 17 நாட்களில் சாலை விபத்துகளில் 20 பேர் பலி - அதிவேகம், போதையில் அதிக விபத்து

    • 2022-ம் ஆண்டு 290 பேர் பலியாகி இருந்தனர். 2021 ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்தது
    • பெரும்பாலான விபத்துக்கள் அதிவேகமாக சென்றதால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு சில விபத்துக்கள் குடிபோதை யிலும் நிகழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்க போலீ சார் பல்வேறு நடவ டிக்கை களை மேற்கொண்டு வரு கிறார்கள்.

    சாலை விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கும் போலீசா அபராதம் விதித்து வருகிறார்கள். கன்னியா குமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தினமும் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார் கள்.

    கடந்த 2021-ம் ஆண்டு 321 பேர் சாலை விபத்துகளில் பலியாகி உள்ளனர். 2022-ம் ஆண்டு 290 பேர் பலியாகி இருந்தனர். 2021 ஆண்டை விட 2022-ஆம் ஆண்டில் பலி எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. 2023-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகன விபத்துக் கள் அதிக அளவு நடந்துள் ளது. இதில் பலியான வர்களில் பெரும்பாலா னோர் இளைஞர்கள் ஆவார்கள். ஆரல்வாய் மொழி போலீஸ் சரகத்துக் குட்பட்ட தாழக்குடி பகுதி யில் 20 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பொங்கல் பரிசுப் பொருட்கள் கொண்டு சென்ற பூதப்பாண்டியைச் சேர்ந்த உமா (50) உலகம்மாள் (77) இருவர் பலியானார்கள்.

    இதே போல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் செல்லும் சாலையில் நேற்று முன்தி னம் நடந்த விபத்தில் சிவகார்த்திக் (19) என்பவர் பலியானார். அஞ்சுகிராமம், தென்தாமரைகுளம், ஈத்தாமொழி ராஜாக்க மங்கலம் போலீஸ் நிலை யத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்த ஆண்டு இதுவரை 5 பேர் விபத்துகளில் பலியாகி உள்ளனர்.

    அதிவேகமாக சென்றதால்...

    தக்கலை, குலசேகரம், பளுகல் போலீஸ் நிலைய பகுதிகளில் 5 பேரும் விபத்தில் இறந்துள்ளனர்.குளச்சல் சப்-டிவிசனில் 3 பேர் விபத்தில் பலியாகி உள்ளனர். நாகர்கோவில் சப்- டிவிஷனில் நடந்த விபத்தில் 7 பேர் இறந்துள்ள னர்.

    கடந்த 17 நாட்களில் 20 பேர் விபத்துகளில் சிக்கி பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலான விபத்துக்கள் அதிவேகமாக சென்றதால் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. ஒரு சில விபத்துக்கள் குடிபோதை யிலும் நிகழ்ந்துள்ளது.

    இந்த ஆண்டு விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடக்கத்தி லேயே அதிகரித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. விபத்துகளை தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிர படுத்துவதுடன் சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்காத நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியு றுத்தியுள்ளனர்.

    மேலும் விபத்துகளை தடுக்கும் வகையில் போலீ சார் விழிப்புணர்வு நிகழ்ச்சி களை நடத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×