என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 3 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டனர்
- சூரியன் உதயமாகும் காட்சியை காண இன்று அதிகாலையில் கடற் கரையில் திரண்ட கூட்டம்
- திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். கடந்த 29 மற்றும் 30-ந் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்விடுமுறை இன்று மே தின விடுமுறை என 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் ஆர்வமுடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர். இந்த தொடர் விடுமுறையை யொட்டி கடந்த 29-ந்தேதி முதல்-இன்றுவரை 3 நாட்கள் தொடர் விடுமுறையில் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 25 ஆயிரத்து 400 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர்.
இதில் கடந்த 29-ந்தேதி சனிக்கிழமை அன்று 8 ஆயிரத்து 600 பேரும் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று 9 ஆயிரத்து 800 பேரும் மே தின தினமான இன்று இதுவரை 7 ஆயிரம் பேரும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தற்போது கோடை காலம் என்பதால் கன்னியாகுமரியில் சூரியன் உதயமாகும் காட்சி தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இதனால் கோடை கன்னியாகுமரியில் கோடை விடுமுறை சீசன்களை கட்டி உள்ளது. கன்னியா குமரி கடலில் இன்று அதிகாலை சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்