search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குளச்சல் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் செலவில் 3 வகுப்பறை கட்டிடங்கள்
    X

    வகுப்பறை கட்டிடங்களை பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தபோது எடுத்த படம் 

    குளச்சல் அரசு பள்ளியில் ரூ.25 லட்சம் செலவில் 3 வகுப்பறை கட்டிடங்கள்

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    • பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அரசு நடுநிலைப்பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறைகள் கொண்ட கட்டிடத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டில் ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதையடுத்து புதிய வகுப்பறைகள் கட்டிடம் திறப்பு விழா பள்ளி தலைமை ஆசிரியை பிஷி ஜாஸ்மின் தலைமையில் நடைபெற்றது. புதிய வகுப்பறைகளை பிரின்ஸ் எம். எல். ஏ., நகர்மன்ற தலைவர் நசீர், வட்டார கல்வி அலுவலர் ஹரிகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். குமரி கிழக்கு மாவட்ட காங். தலைவர் கே. டி. உதயம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சாமுவேல்சேகர், லாரன்ஸ், செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெயராஜ், நகர தலைவர் சந்திரசேகர், நகர்மன்ற முன்னாள் துணைத்தலைவர் லதா ராபின்சன், கவுன்சிலர்கள் ரமேஷ் செல்வகுமாரி, சுரேஷ் குமார், முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் மோகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பசீலா, துணைத்தலைவர் சமீனுதீன், பெற்றோர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

    Next Story
    ×