search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கன்னியாகுமரியில் 3 நாட்கள் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு
    X

    சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் பேட்டி அளித்தபோது எடுத்த படம்.

    கன்னியாகுமரியில் 3 நாட்கள் சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு

    • தொழிலாளர்களை பாதிக்கும் சட்டங்களை கண்டித்து நடக்கிறது
    • நவம்பர் 4-ந் தேதி தொடங்குகிறது

    நாகர்கோவில்:

    இந்திய தொழிற்சங்க மையம் (சி.ஐ.டி.யூ.) மாநில பொதுச்செயலாளர் சுகுமாரன் இன்று நாகர்கோவிலில் நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்திய தொழிற்சங்க மைய(சி.ஐ.டி.யூ)த்தின் 15-வது மாநில மாநாடு வருகிற 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கி றது. தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மக்களை பாதிக்கும் அரசின் கொள்கைகள் ஆகியவை சம்பந்தமாகவும் எதிர் கால நடவடிக்கைகள் குறித்தும் மாநாட்டில் திட்டமிடப்படும்.

    பொதுத்துறை நிறுவ னங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கி உள்ளது. இதனை கைவிட வேண்டும். மேலும் மத்திய அர சின் பல்வேறு சட்டத்திரு த்தங்கள் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.

    பெட்ரோல்- டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு ஒரு புறம் இருக்க, படித்த இளை ஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு தவறி விட்டது.

    தி.மு.க. அரசு தொழிலா ளர் சம்பந்தமான பிரச்சினை களில் உாிய தீர்வுகள் காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்கள் சம்பந்தமான தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். இதற்கு மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஆகிய வற்றை கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தோட்டங்களை அதிகாித்தி டவும், முந்திரி தொழிலை பாதுகாத்திடவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தேங்காப்பட்டணம் துறைமுகத்தை மீண்டும் உயிரிழப்பு ஏற்படாத வகையில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். குமரி மாவட்டத்தில் மக்கள் ஒற்றுமை, அமைதி, வளர்ச்சியை மையமாக வைத்து வருகிற 3-ந் தேதி யன்று சிறப்பு கருத்த ரங்கம், கலைவிழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெறஉள்ளது.

    முன்னதாக சமூக ஒருமைப்பாட்டை முன்வைத்து வருகிற 2-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான மினி மாரத்தான் நடைபெற உள்ளது. வருகிற 6-ந் தேதி நாகர்கோவிலில் சுமார் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்கும் பேரணி, பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநாடு வரவேற்புக்குழு தலைவர் செலஸ்டின், செயலாளர் தங்கமோகன் மற்றும் நிர்வாகிகள் சித்ரா, அகமது உசேன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×