search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆதார் எண் இணைக்க வாக்குசாவடிகளில் வருகிற 4-ந்தேதி சிறப்பு முகாம்
    X

    ஆதார் எண் இணைக்க வாக்குசாவடிகளில் வருகிற 4-ந்தேதி சிறப்பு முகாம்

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
    • பொது மக்கள் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 4-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் செம்மையாக்கும் பொருட்டும், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனித்தக வல்களை உறுதிப்படுத்திடவும், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம் பெறுதல் அல்லது இருவேறு தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவற்றை தவிர்க்கும் பொருட்டும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக பொது மக்கள் வாக்காளர் அடை யாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக தங்களது பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளில் செப்டம்பர் 4-ந்தேதி சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

    எனவே கன்னியாகுமரி மாவட்ட வாக்காளர்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அடையாள அட்டையுடன் மேற்படி சிறப்பு முகாம் அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×