search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய 53-வது ஆண்டு விழா
    X

    கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய 53-வது ஆண்டு விழா

    • முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு
    • 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் பகவதி அம்மன், சிவபெருமானை வேண்டி ஒற்றைக்காலில் நின்று தவம் புரிந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. இதனால் அந்தப் பாறையில் பகவதி அம்மனின் ஒற்றைக் கால் பாதம் இயற்கையாகவே பதிந்து இருந்தது. இந்தக் கால் பாதத்தை பார்த்து சுவாமி விவேகானந்தர் 1892-ம் ஆண்டு தியானம் செய்தார். அதன் பிறகு அவர் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகருக்கு சென்று பேசினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்டப்பட்டது. 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணி க்கப்பட்டது. அன்றுமுதல் இந்த மண்ட பத்தை தினமும் ஆயிர க்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்க ள். இந்த மண்டபம் நிறுவி 52 ஆண்டுகள் நிறைவடைந்து இன்று 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி இன்று காலை கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய சுற்றுலா பயணிக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவுபரிசு வழங்கப்பட்டது.

    கடந்த 53 வருடங்களில் இன்று வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 7 கோடியே 20 லட்சத்து 7ஆயிரத்து 571 பேர் பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    Next Story
    ×