என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் உண்டியல் மூலம் ரூ.6½ லட்சம் வசூல்
- காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது
- 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள்.
அவர்கள் தங்களது நேர்ச்சை நிறைவேறுவ தற்காக வேண்டி கோவில் உண்டியலில் பணம், காசு, தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களை காணிக்கையாக செலுத்து வது வழக்கம். இதற்காக வெங்கடாஜலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள் ஆகிய 3 சன்னதிகள் முன்பும் 3 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த உண்டியலில் உள்ள காணிக்கை எண்ணும்பணி சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அலுவலர் விஜய குமார், கன்னியாகுமரி திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஆய்வாளர் ஹேமதர் ரெட்டி, கோவில் பக்தர்கள் சங்க நிர்வாகி ஜெயராம் மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. உண்டியல் எண்ணும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் மதுரையைச் சேர்ந்த சேவகர்கள் ஈடுபட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 3 மணி வரை நீடித்தது. இதில் வருமானமாக ரூ.6 லட்சத்து 40 ஆயிரத்து 494 வசூல் ஆகி இருந்தது.