search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் கொள்ளை
    X

    சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த கொள்ளையர்கள் உருவம்.

    நாகர்கோவிலில் 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் கொள்ளை

    • சி.சி.டி.வி. காமிராவில் பதிவான 2 கொள்ளையர் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38).

    இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை பார்த்து வரு கிறார். இதையடுத்து சங்கர நாராயணன் குடும்பத்தோடு நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் சங்கரநாராயணன் மனைவி பிருந்தா மகள் இருவரும் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர்.

    சங்கர நாராயணன் வேலை பார்த்த நிறுவ னத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சங்கரநா ராயணன் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த னர். அதில் 2 பேரின் கைரேகைகள் சிக்கி உள்ளது.

    அந்த கைரேகை போலீ சார் கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீ சார் கைப்பற்றி தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் நள்ளிரவு 1.36 மணிக்கு வந்துவிட்டு 2.40 மணி வரை கைவரிசையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடம் கொள்ளையர்கள் அங்கேயே இருந்து கைவரி சையில் ஈடுபட்டுள்ளனர்.சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாததை நோட்டமிட்டே இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

    போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×