search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருந்தன்கோடு யூனியன் பகுதியில் ரூ.6.20 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்
    X

    குருந்தன்கோடு யூனியன் பகுதியில் ரூ.6.20 கோடியில் வளர்ச்சி திட்டப் பணிகள்

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இரணியல் :

    குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா பொறுப் பேற்றது முதல் ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் மூலம் பெற்று தந்து வருகிறார். சமீபத்தில் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதி களில் சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து பணிகள் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் தற்போது திங்கள்நகர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 14 லட்சத்து 82 ஆயிரம், கல்லுக்கூட்டம் பேரூராட்சியில் ரூ. 1 கோடியே 3 லட்சத்திற்கும், ரீத்தாபுரம் பேரூராட்சியில் ரூ. 93.7 லட்சம், நெய்யூர் பேரூராட்சியில் ரூ. 2 கோடியே 11 லட்சம் என மொத்தம் ரூ. 6 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்கான சாலை, குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது.

    இந்த பணிகளின் தொடக்க விழா அந்தந்த பேரூராட்சி பகுதிகளில் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும் மேயருமான மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர்கள் திங்கள்நகர் சேவியர் ஏசு தாஸ், கல்லுக்கூட்டம் ரஜூ லின் ராஜகுமார், ரீத்தாபுரம் சுஜெய் ஜாக்ஸன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், குளச்சல் நகர் மன்ற தலைவர் நசீர், பேரூராட்சி மன்ற தலைவர்கள் சுமன், மனோகரசிங், பிரதீபா, காங்கிரஸ் மாநில பொதுக் குழு உறுப்பினர் லாரன்ஸ், குளச்சல் சபீன், ஜெயசகிலா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், செயல் அலுவலர்கள் கழக நிர்வாகி கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×