search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே கனிமவளங்களை அதிகபாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி சென்ற 7 வாகனங்கள் பறிமுதல்
    X

    களியக்காவிளை அருகே கனிமவளங்களை அதிகபாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி சென்ற 7 வாகனங்கள் பறிமுதல்

    • கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.
    • வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங் களில் இருந்தும் நூற்றுக்க ணக்கான லாரிகளில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வருகிறது.

    இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

    இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிகளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும், பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் பி.பி.எம். சந்திப்பு பகுதியில் திடீரென வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 7 வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனங்களில் கனிமவளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார் வாகனங்களை களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கனிமவளங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது. இதன் உரிமையாளர் யார் என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×