என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குமரியில் ராட்சத அலை இழுத்து சென்ற 10-ம் வகுப்பு மாணவன் பிணமாக மீட்பு
- விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்தபோது சோகம்
- போலீசார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
அஞ்சுகிராமம் அருகே வட்டக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன், டெம்போ டிரைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு திவாகர் (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கண்ணன் தற்பொழுது காணி மடத்தில் வாடகை வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்தார். கண்ணனின் மகன் திவாகர் கோவையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். விநாயகர் சதுர்த்தி விடுமுறையை அடுத்து திவாகர் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இதையடுத்து நேற்று வீட்டில் இருந்து திவாகர் தனது தாயார் சித்ரா மற்றும் சகோதரி உடன் அஞ்சுகிராமம் அருகே ரஸ்தாகாடு கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் அங்கு கடல் அலையை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது திவாகர் கடலில் இறங்கி கால் நனைத்துள்ளார்.
அப்போது அங்கு வந்த ராட்சத அலை அவரை இழுத்துச்சென்றது. தாய் மற்றும் சகோதரியின் கண் எதிரே திவாகரை ராட்சத அலை இழுத்துச் சென்றதைப் பார்த்த அவர்கள் கூச்சலிட்டனர். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசுக்கும், கடலோர பாதுகாப்பு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட் டது.
அவர்கள் சம்பவ இடத் திற்கு வந்து தேடுதல் வேட் டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் திவாகர் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை. இரவு நேரம் ஆகிவிட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை திவாகரை அலை இழுத்துச் சென்ற இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கரை ஒதுங்கியது.
இதை பார்த்த பொது மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். திவாகரின் உறவினர்களும் அங்கு வந்தனர். அவர்கள் திவாகர் உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதற்கிடையில் போலீ சார் திவாகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ராட்சத அலையில் மாணவன் சிக்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்