என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிள்ளியூர் தாலுகாவில் உரிமையியல் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க வேண்டும்
- சட்டத்துறை அமைச்சரிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை
- கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர்.
கன்னியகுமரி:
குமரி மாவட்டத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடக்க விழாவில் கலந்து கொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை, தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கடந்த 19-02-2019 -ல் புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டது. கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், புதுக்கடை, நித்திரவிளை, கொல்லங்கோடு ஆகிய போலீஸ் நிலையங்கள் உள்ளன.
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். மேலும், கன்னியாகுமரி மேற்கு கடற்கரையோரம் குறும்பனை முதல் நீரோடி வரை 30 கிலோ மீட்டர் தூரத்திற்குட்பட்ட பகுதியில் சுமார் 1 லட்சம் மீனவ மக்கள் வாழ்கின்றனர்.
புதிதாக கிள்ளியூர் தாலுகா உருவாக்கப்பட்டதால் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்கள் மிகுந்த பயனடைந்துள்ளனர். ஆனால், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குள் நீதிமன்றம் இல்லாததால் மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்து இரணியல், குழித்துறை போன்ற நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
மேற்படி நீதிமன்றங்களில் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் உடனடியாக நீதி கிடைக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே, தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளி யூர் சட்டமன்ற தொகுதி யிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.