search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 7 பேர் கும்பல்
    X

    தீயில் கருகி சாம்பலாகி கிடந்த மோட்டார் சைக்கிள்

    கன்னியாகுமரி அருகே மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த 7 பேர் கும்பல்

    • 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
    • தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள பரமார்த்தலிங்கபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது35).இவர் மினி டெம்போ டிரைவர் ஆவார்.

    இவர் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் பழுதடைந்து விட்டதால்அந்த மோட்டார் சைக்கிளை கடந்த 16-ந்தேதி இரவு நேதாஜி காலனியில்நிறுத்திவிட்டு சென்றுஉள்ளார். மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அவர் பல இடங்களில் தேடிப் பார்த்தும் அந்த மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்து அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சுதாகர் நேதாஜி காலனியில் உள்ள சுடுகாட்டில் சென்று பார்த்தார்.அப்போது அவரது மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்து சாம்பலானநிலையில் காணப்பட்டது.

    இது பற்றி சுதாகர் கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும்அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தனர்.இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த 7 பேர் அந்த மோட்டார் சைக்கிளை உருட்டி சென்று சுடுகாட்டில் வைத்து தீ வைத்து எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி போலீசார் அந்த 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் நேதாஜி காலனியைச் சேர்ந்த வசந்தகுமார், அழகர், வசந்த், சுரேஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுஉள்ளனர்.

    இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த கும்பல் மோட்டார் சைக்கிளை தீ வைத்ததற்கான காரணம் என்ன?என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×