search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தும் கும்பல்
    X

    களியக்காவிளை பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தும் கும்பல்

    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
    • தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை சுற்று வட்டார பகுதிகளான அதங்கோடு, குழித்துறை, பழவார் ஆகிய பகுதிகளில் இருந்து மணல் கடத்தல், தனியார் நிலங்களில் இருந்து பாறைகள் உடைத்து கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள் நடந்து வந்தது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் போலீசார் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்ததால் ஆற்றில் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டது.

    ஆனால் இப்போது களியக்காவிளை சுற்றுவட்டார பகுதிகளில் செம்மண் கடத்தல் அதிகரித்துள்ளது. தனியார் நிலங்கள், புறம்போக்கு நிலங்களில் இருந்து அதிகமாக செம்மண் கடத்தப்படுகிறது. இதற்காக களியக்காவிளை பகுதிகளில் குறிப்பிட்ட சில கும்பல்கள் உள்ளன. இது குறித்து புகார் எழுந்ததால் தனிப்படை அமைத்து கடத்தல் வாகனங்கள் ஜே.சி.பி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

    தற்போது மீண்டும் களியக்காவிளை சுற்றுவட்டார பகுதியில் இரவோடு இரவாக செம்மண் கடத்தல் அதிகம் நடந்து வருகிறது. குறிப்பாக படந்தாலுமூடு, திருத்தோபுரம், குழித்துறை ஆத்துக்கடவு, ஈத்தவிளை, பாலவிளை, மடிச்சல் போன்ற பகுதிகளில் இருந்து இரவு ஏராளமான வாகனங்களில் செம்மண் கடத்தப்படுகிறது.

    இது குறித்து புகார் இருந்தா லும் யாரும் கண்டு கொள்வ தில்லை. ஆகவே களியக்கா விளை பகுதியில் கொடிகட்டி பறக்கும் செம்மண் கடத்தலை முடி வுக்கு கொண்டு வர மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×