search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் செட்டிகுளத்தில் நடுரோட்டில் இன்று குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    நாகர்கோவில் செட்டிகுளத்தில் நடுரோட்டில் இன்று குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய அரசு பஸ்போக்குவரத்து நெருக்கடியால் வாகன ஓட்டிகள் அவதி

    • குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது
    • சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது.

    நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகர பகுதியில் பாதாள சா க்கடை திட்டப்பணிகள் மற்றும் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது. செட்டிகுளத்தில் இருந்து இந்து கல்லூரி செல்லும் சாலையில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்திற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பைப் லைன்கள் அமைக்கப்ப ட்டது. அதன் பிறகு அந்த பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலை அமைக்கப்பட்டது.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து அந்த பைப் லைன்கள் அமைக்கப்பட்ட பகுதியில் சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டது. பள்ளங்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால் 2 நாட்களாகியும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்பட வில்லை.

    இந்த நிலையில் இன்று காலை கண்ணன் குளத்திலி ருந்து வடசேரி நோக்கி அரசு பஸ் வந்து கொண்டி ருந்தது. காலை 9 மணிய ளவில் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் வந்த போது சாலையின் நடுவே உள்ள பள்ளத்தில் பஸ்சில் முன் சக்கரம் சிக்கியது. இதையடுத்து டிரைவர் பஸ்சை இயக்க முயன்றார். அப்போது பஸ்சின் முன் சக்கரம் தொடர்ந்து பள்ள த்தில் புதைந்தது. மேலும் பஸ்சின் முன் பகுதியும் சாலையில் தட்டியதால் பஸ்சை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பஸ் நடுவழியில் நிறுத்தப்ப ட்டது. பஸ்சில் இருந்த பய ணிகள் இறக்கிவிட ப்பட்ட னர். மாற்று பஸ் மூல மாக அவர்கள் அனுப்பப்ப ட்டனர். பஸ் பாதாள சாக்கடை பள்ளத்தில் புதைந்து நின்றது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காலை நேரம் என்பதால் சாலையின் இருபுறமும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள். காலை நேரம் என்பதால் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவ லகங்களுக்கு சென்றவர்கள் போக்குவரத்து நெருக்கடி யில் சிக்கி தவித்தனர். போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பள்ளத்தில் புதை த்த அரசு பஸ்சை மீட்கும் பணியும் மேற்கொள்ள ப்பட்டது.

    சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சாலையில் புதைந்த அரசு பஸ்சை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பஸ் புதைந்த இடத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சாலையில் தொடர்ந்து பள்ளம் ஏற்பட்டதையடுத்து அந்த பகுதியில் தடுப்பு வேலிகள் மூலம் அடைக்க ப்பட்டது. இதனால் சாலை குறுகலாக காட்சியளித்தது. வாகனங்கள் அந்த பகுதி யில் ஊர்ந்து சென்றன. அதே பகுதியில் உள்ள பள்ளத்தில் ஆட்டோ ஒன்றும் சிக்கியது.

    இதேபோல் செட்டிகுளம் சந்திப்பு பகுதியிலும் சாலை நடுவே பள்ளம் ஏற்பட்டு 2 நாட்களாக உள்ளது. ஆனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும், மாநக ராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில் உள்ளனர். பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் கம்பு ஒன்றை நாட்டி துணியை சுற்றி வைத்துள்ளனர். இந்த பிரச்சனைகள் தொடர்பு டைய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக செட்டி குளம் பகுதியை ஆய்வு செய்து அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதற்கு நிரந்தர தீர்வாக பைப் லைன் அமைக்கப்பட்ட பகுதியில் சாலைகளை அப்புறப்படுத்தி விட்டு பைப்லைன் அமைக்க ப்பட்ட பகுதியின் மேல் காங்கிரீட் தளம் அமைத்து அத ன்பிறகு சாலை அமை க்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    Next Story
    ×