search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒழுகினசேரியில் நடுரோட்டில் மின்வயரில் உரசி நின்ற லாரி
    X

    ஒழுகினசேரியில் நடுரோட்டில் மின்வயரில் உரசி நின்ற லாரி

    • போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவித்த வாகனங்கள்
    • சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஒழுகின சேரி பகுதியில் பழைய ஆற்றின் மேல் பழமை வாய்ந்த குறுகலான பாலம் உள்ளது. இந்த பகுதியில் தினமும் காலை. மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.

    இதை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க ஒழுகினசேரி பகுதியில் அடிக்கடி வாக னங்கள் பழுதாகி நிற்பது வாடிக்கையாகிவிட்டது. இன்று காலையிலும், நாகர்விலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று ஒழுகினசேரி பகுதியில் மின் வயர் மீது உரசி நடுவழியில் நின்றது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை சென்ற வாகனங்கள் வடசேரி வரையிலும், நெல்லையிலிருந்து நாகர் கோவில் வந்த வாகனங்கள் அப்டா மார்க்கெட் வரையிலும் நீண்ட வரிசையில் நின்றன. சுமார் ½ மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. இது பற்றிய தகவல் அறிந்ததும் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் நடுரோட்டில் மின் வயரில் சிக்கி நின்ற லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ½ மணி நேரத்திற்கு பிறகு லாரி நடுரோட்டில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போக்கு வரத்து சீரானது. ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள இரட்டை ரெயில் பாதை பணிக்காக பாலம் அமைக்கும் பணியும் தற்போது முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. இருபுறமும் தூண்கள் அமைக்கப்பட்டு மணல்கள் நிரப்பும் பணி நடந்து வரு கிறது. பாலத்தின் மேல் தளம் கான்கிரீட் அமைப்பதற்கான பணி கிடப்பில் கிடக்கிறது. அந்த பணியை துரிதப்படுத்தி வேகமாக பாலத்திற்கான மேல் தளத்தை அமைத்து பஸ் போக்குவரத்தை பாலத்தின் வழியாக விடும்போது போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அந்த பால பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது

    Next Story
    ×