search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மீது மினி லாரி மோதல்
    X

    ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் மீது மினி லாரி மோதல்

    • சாலையில் உள்ள தடுப்பு வேலிகள் மீதும் மோதியது
    • டிரைவர்-கண்டக்டர் படுகாயம்

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் இருந்து வெள்ளமடம். ஆண்டார் குளம். ராமபுரம் வழியாக ராஜாவூருக்கு அரசு பஸ் இன்று காலை புறப்பட்டு சென்றது.

    திருப்பதி சாரம் நான்கு வழிச்சாலையில் பஸ் சென்ற போது நெல்லை யிலிருந்து நாகர்கோவிலுக்கு காய்கறி ஏற்றி வந்த மினி லாரி, டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து நான்கு வழிச்சாலையில் இருந்த தடுப்பு வேலிகள் மீது மோதியது.

    பின்னர் அரசு பஸ்ஸின் பின்பகுதியில் மோதியது. இதில் பஸ்ஸின் பின்பகுதி சேதமடைந்தது. விபத்தில் பஸ்சின் டிரைவர், கண்டக்டர் படுகாயம் அடைந்த னர். பஸ்ஸில் இருந்த 4 பெண் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச் சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து ஆரல் வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். முதல் கட்ட விசாரணையில், விபத்தின் போது மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது நான்கு வழிச்சாலையில் வேகமாக வந்த மினி லாரியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் டிரைவர் சாலையில் இருந்த தடுப்பு வேலிகள் மீது மோதி பஸ்சின் பின் பகுதியில் இடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே நேற்று லாயம் பகுதியில் நடந்த விபத்தில் பஸ் மீது வேன் மோதியதில் 4 பேர் பலியானார்கள். இந்த நிலையில் இன்று மீண்டும் அரசு பஸ் விபத்தில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல்கிணறிலிருந்து தேரைக்கால் புதூர் வழியாக திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.

    தற்போது காவல் கிணறு முதல் தேரேக்கால் புதூர் வரை உள்ள சாலையில் வேலைகள் முடிந்ததை யடுத்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் இந்த சாலையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த சாலை யில் வாகனங்கள் அதி வேகமாக வருவதால் விபத்துக்கள் நடந்து வருகிறது. 4 வழி சாலைகளை கடந்து பல கிராமங்களுக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களிலும் நான்கு சக்கர வாகனங்களிலும் சென்று வருகிறார்கள். திடீரென சாலையைக் கடக்கும் போது நான்கு வழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டு வருகின் றன. எனவே 4 வழிச் சாலையின் பிரிவு சாலை களில் விபத்தை தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×