search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் கருவிகளின் புகைப்பட கண்காட்சி
    X

    கன்னியாகுமரியில் கருவிகளின் புகைப்பட கண்காட்சி

    • அரசு அருங்காட்சியகத்தில் பழந்தமிழரின் பாரம்பரிய இசை
    • சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அரசு அருங்காட்சியகத்தில் உலக இசை தினத்தை முன்னிட்டு பழந்தமிழரின் பாரம்பரிய இசை கருவிகளின் புகைப்பட கண்காட்சி தொடங்கப் பட்டுள்ளது. மிக தொன்மையான செழித்த இசை பாரம்பரியம் இந்தியா வின் கலாச்சாரத்தில் ஆழ மாக வேரூன்றி உள்ளது. இசை இல்லாத விழாவோ, சடங்கோ ஒன்று கூட கிடையாது.

    வெவ்வேறு தனித்துவ மான பெயர், வடிவம், கட்டுமானம், நுட்பம் மற்றும் தரம் ஆகியவற்றை கொண்ட இசைக்கருவிகள் சுமார் 500-க்கும் மேல் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள் ளன. இந்திய இசை கருவிகள் அடி இசைக் கருவிகள், காற்று இசைக் கருவிகள், நரம்பு இசைக் கருவிகள் என 3 வகையாக பிரிக்கப்ப டுகின்றன.

    இதில் நரம்பு இசைக் கருவிகளுக்கு நீண்ட பாரம்பரியமும் அதில் வகைகளும் உண்டு. மனித வரலாற்றில் அடி இசைக் கருவி ஆதியில் தோன்றிய முதல் இசைக்கருவிகள். அதன் பின் காற்று இசைக் கருவிகள் தோன்றின. கடைசி யில் நரம்பு இசைக்கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பயன்படுத்தப்படும் முறை வாரியாக இசைக் கருவிகள் நாட்டுப்புற இசைக்கருவிகள், போர் இசைக்கருவிகள், கோவில் இசை கருவிகள் மற்றும் செவ்வியல் இசைக் கருவிகள் என 4 வகையாக பிரிக்கப்படுகின்றன.

    செவ்வியல் இசை கர்நா டக இசை, ஹிந்துஸ்தானி இசை என 2 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சுரக்காய், மூங்கில், பிரம்பு, பலாமரம், கட்டு மரங்கள் கருங்காலி, செம்மரம் மண் பாண்டம், கன்று செம்மரி, எருமை மற்றும் உடுப்பு தோல், வெள்ளி, வெண்கலம், பித்தளை, தாமிரம், இரும்பு ஆகியவை இசைக்கருவி களின் பல்வேறு பாகங்களை உருவாக்க பயன்படுத்தப்பட் டன. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பழந்தமி ழர்களின் தொல் இசை கருவியான செங்கோட்டு யாழ், எருது யாழ், விற்குடி யாழ், மயில் யாழ் போன்ற பல்வேறு இசை கருவிகளின் புகைப்படங்களை இக்கண் காட்சியில் காணலாம்.

    நேற்று தொடங்கப்பட்ட இந்த கண்காட்சியினை மாணவ, மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கண்காட்சி ஜூலை மாத இறுதி வரை காட்சிப் படுத்தப்பட்டிருக்கும் என்று கன்னியாகுமரி அரசு அருங்காட்சியக காப்பாட்சி யர் (கூடுதல் பொறுப்பு) சத்திய வள்ளி தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×