என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர்கோவிலில் அளவுக்கு அதிகமாக 40 பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த தனியார் வேன் சிக்கியது
- 2-வது முறையாக சிக்கிய ஆட்டோக்களுக்கு ரூ.1,500 அபராதம்
- அதிகளவு மாணவிகளை ஏற்றி வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரைவர்களுக்கு எச்சரிக்கை
நாகர்கோவில் :
பள்ளி வாகனங்களில் அதிக குழந்தைகளை ஏற்றி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் போக்குவரத்து பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். நாகர்கோவில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லச்சாமி தலைமையிலான போலீசார் வடசேரி பகுதியில் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோக்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதிக மாணவிகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதில் 2 ஆட்டோக்கள் 2-வது முறையாக சிக்கியது தெரியவந்தது. அந்த ஆட்டோக்களுக்கு தலா ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. மற்ற 2 ஆட்டோக்களுக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட் டது. இதேபோல் தனியார் வேன்களிலும் அதிக மாணவிகளை ஏற்றி வருவதாக வந்த புகாரை தொடர்ந்து வேன்களை தடுத்து நிறுத்தியும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வேன்களில் அதிக மாணவ-மாணவிகள் இருந்தது தெரியவந்தது. அந்த 2 வேன் டிரைவருக்கு தலா ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டதுடன் போலீசார் அவரை எச்சரித்தனர். இதுபோன்ற அதிகளவு மாணவிகளை ஏற்றி வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரைவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
வடசேரி பகுதியில் இன்று நடந்த சோதனையில் 4 வேன்களும், 4 ஆட்டோக்க ளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோட்டார் பகுதியிலும் அதிக மாணவிகளை ஏற்றி வந்த ஆட்டோக்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனார். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண் கூறுகையில், ஆட்டோக்களில் அதிக மாணவ-மாணவிகளை ஏற்றி வருகிறார்கள் என்பது குறித்து தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தனியார் வேன்களிலும் அதிக மாணவிகளை ஏற்றி வருவதாக புகார்கள் வந்ததையடுத்து இன்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது 13 குழந்தைகளை ஏற்றி செல்லும் ஒரு வேனில் 40-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. அந்த வேனுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட் டுள்ளது. இந்த சோதனையில் அதிக குழந்தைகளை ஏற்றி வந்ததாக 2-வது முறையும் ஆட்டோக்கள் சிக்கி வருகின்றன.
3-வது முறையாக அதே ஆட்டோக்கள் சிக்கினால் அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே டிரைவர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்