search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரத்தில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு
    X

    கொட்டாரத்தில் ஆற்றில் மீனுக்காக விரித்த வலையில் சிக்கிய ராட்சத மலைப் பாம்பை வனத் துறையினர் மீட்ட போது எடுத்த படம்

    கொட்டாரத்தில் மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு

    • ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.
    • கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் நாஞ்சில் நாடு புத்தனாறு என்ற ஆறு ஓடுகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து இந்த ஆறு வழியாக கடைவரம்பு பகுதிகளுக்கு விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தற்போது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் இந்த ஆற்றில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகிறது. இதற்கிடையில் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே செல்லும் இந்த ஆற்றில் மீன் பிடிப்பதற்காக சிலர் மீன்வலைகளை தண்ணீரில் போட்டு வைத்துள்ளனர்.

    இந்த வலையில் நேற்று ராட்சதமலைப்பாம்பு ஒன்று சிக்கி கொண்டது. இதை அந்த பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி ஓட்டம் பிடித்தனர். இது பற்றி கொட்டாரம் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் செல்வன் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் மருந்துவாழ் மலை வேட்டை தடுப்பு காவலர் பிரவீன் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய ராட்சதமலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பு சுமார் 5 அடி நீளம் கொண்டதாக இருந்தது. அந்த ராட்சதமலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக காட்டு பகுதியில் பத்திரமாக கொண்டு விட்டனர்.

    Next Story
    ×