என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கடல்நீர்மட்டம் "திடீர்" தாழ்வு
- விவேகானந்தர் மண்டபத்துக்கு இன்று படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதம்
- குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் இன்று காலை விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறை அமைந்துஉள்ள வங்க கடல் பகுதியில் நீர் மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
அதே சமயம் இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் அமைந்துள்ள தெற்கு மற்றும் மேற்கு கடல் பகுதியில் கடல் சீற்ற மாகவும் கொந்தளிப்பா கவும் காணப்பட்டது. இதனால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்கு வரத்து தொடங்கப்பட வில்லை.
ஆனால் படகுத் துறையில் நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது.இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 10 மணிக்கு விவே கானந்தர் நினைவு மண்டப த்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதற்கிடையில் கன்னி யாகுமரி, சின்ன முட்டம், வாவத்துறை, ஆரோக்கிய புரம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி, பள்ளம் போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்ற மாகவும் கொந்தளிப்பா கவும் காணப்பட்டது. இதனால் குறைந்த அளவு வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.