search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் திடீர் ஆய்வு
    X

    பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் ஆய்வு நடந்தபோது எடுத்த படம் 

    தென்தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் திடீர் ஆய்வு

    • அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு
    • பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்குட்பட்ட தென் தாமரை குளம், பூவியூர், முகிலன்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், மருந்தகங்கள், ஓட்டல்கள், துணிக்கடைகள், டீக்கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து திடீர் ஆய்வு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், செயல் அலுவலர் கிருஷ்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள்,பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். அவர்கள் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு மேற்கொண்டு அதை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×