search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏ.சி. பழுதானதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தம் - நெல்லை சென்றதும் வேறு பெட்டி பொருத்தப்பட்டது
    X

    ஏ.சி. பழுதானதால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நடு வழியில் நிறுத்தம் - நெல்லை சென்றதும் வேறு பெட்டி பொருத்தப்பட்டது

    • ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை
    • வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு தினமும் மாலை கன்னி யாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மறுநாள் காலையில் 6.10 மணிக்கு சென்னையை சென்றடையும்.

    நேற்று வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5.45 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டது. நாகர்கோவிலுக்கு 6.07 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் இங்கிருந்து ரெயில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. வள்ளியூர் அருகே சென்ற போது குளிர்சாதன வசதி கொண்ட ரெயில் பெட்டி ஒன்றில் ஏசி செயல்படவில்லை. இதனால் அதில் இருந்த பயணிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து பயணிகள் ரெயிலை நடு வழியில் நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ரெயில் பயணி களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நெல்லை சென்றதும் மாற்று குளிர்சாதன பெட்டி பொருத்தப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வள்ளியூரில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு சென்றது. வள்ளியூர் ரெயில் நிலையத்தில் மாலை 6.47 மணி முதல் இரவு 7.15 மணி வரை சுமார் ½ மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

    வள்ளியூரில் இருந்து புறப்பட்ட கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லை சென்றடைந்ததும் குளிர்சாதன பெட்டியை மாற்ற அதிகாரிகள் நடவ டிக்கை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து பழுதான குளிர்சாதன பெட்டியை மாற்றி விட்டு அதற்கு பதிலாக புதிதாக ஒரு குளிர்சாதன பெட்டி இணைக்கப்பட்டது.

    இதனால் நெல்லையி லிருந்து ரெயில் புறப்பட்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. வள்ளியூர் மற்றும் நெல்லை யில் ரெயில் தாமதமாக சென்றதால் இன்று அதிகாலை சென்னைக்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக சென்று சேர்ந்தது.

    Next Story
    ×