search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களியக்காவிளை அருகே மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
    X

    மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ தலைமையில் பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் மனு கொடுக்க வந்திருந்தபோது எடுத்த படம் 

    களியக்காவிளை அருகே மாணவனுக்கு திராவகம் கலந்த குளிர்பானம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • கலெக்டரிடம் பெற்றோர் கண்ணீர் மல்க மனு
    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    நாகர்கோவில்:

    களியக்காவிளை அருகே உள்ள மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்தவர் சுனில். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது 11 வயது மகன் அதங்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சம்பவத்தன்று மதியம் பள்ளியில் இருந்து இவன் வீடு திரும்பும் போது, அதே பள்ளிச் சீருடையில் வந்த மாணவன், குளிர்பானம் ஒன்றை கொடுத்துள்ளான்.

    அதனை வாங்கி சுனில் மகன் குடித்துள்ளான். சிறிதளவே குடித்த அவனுக்கு இரவில் காய்ச்சல் மற்றும் வேறு சில உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    பின்னர் சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுவன் குடித்த குளிர்பானத்தில் திராவகம் கலந்திருப்பதாக கூறினர். இதனால் சிறுவனின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்தநிலையில் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் களியக்காவிளை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    விரைவில் குற்றவாளியை கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சூழலில் சிறுவனின் பெற்றோர், இன்று காலை குறைதீர்க்கும் நாளில், மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க ஒரு மனு அளித்தனர். அதில், போலீசார் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை.எனவே கலெக்டர் தலையிட்டு, எங்கள் மகனுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும். எனது குடும்பத்தின் சூழ்நிலை கருதி மகன் மருத்துவ செலவிற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

    Next Story
    ×