search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்வதிபுரம் ரெயில்வே பாலம் அருகே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும் இடத்தில் மடை அமைக்க நடவடிக்கை - மேயர் மகேஷ் உறுதி
    X

    பார்வதிபுரம் ரெயில்வே பாலம் அருகே இரட்டை ரெயில் பாதை அமைக்கப்படும் இடத்தில் மடை அமைக்க நடவடிக்கை - மேயர் மகேஷ் உறுதி

    • இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.
    • வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே இரட்டை ெரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. பார்வதிபுரம் பகுதியிலும் இரட்டை ெரயில் பாதை அமைப்பதற்கு மணல்கள் நிரப்பப்பட்டு தண்ட வாளங்கள் போடப்பட்டு வருகிறது.

    பார்வதிபுரம் ெரயில்வே மேம்பாலம் அருகில் தண்டவாளத்தின் அடியில் தண்ணீர் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு செல்வதற்கு மடை அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இரட்டை ரெயில் பாதை பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த பகுதியில் மடை அடைக்கப் பட்டு மணல் நிரப்பப்பட் டுள்ளது.

    இதனால் மழை நேரங்க ளில் ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் தண்ணீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள், மேயர் மகேசிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து மேயர் மகேஷ் இன்று காலை அந்த பகுதியை நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இது தொடர்பாக ெரயில்வே அதிகாரிகளுடன் பேசினார்.

    பின்னர் மேயர் மகேஷ் கூறியதாவது

    ராஜீவ் காந்தி நகர், பார்வதிபுரம் குடியிருப்பு, இலந்தையடி பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வரு கிறார்கள். இந்த பகுதியில் உள்ள பொதுப்பணித்து றைக்கு சொந்தமான குளங்களில் இருந்து வெளி யேறும் தண்ணீர் ெரயில்வே தண்டவா ளத்தின் கீழ் உள்ள மடை வழியாக அடுத்த பகுதிக்கு சென்றது. தற்பொழுது இரட்டை ரெயில்வே பாதை பணி நடைபெற்று வரும் நிலை யில் தண்டவாளத்திற்கு கீழ் மடை அமைக்கப்பட வில்லை. எனவே வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதிகாரி கள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து ள்ளனர். நாகர்கோவில் நகரில் கழிவு நீர் ஒடைகளை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு புத்தன்அணை யில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது மழை பெய்து வரும் நிலையில் தண்ணீர் பிரச்ச னைக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், திமுக மாணவரணி அமைப்பாளர் அருண் காந்த் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், ஷேக் மீரான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×