என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலில் இன்று கொட்டும் மழையில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் - நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தை மாநகராட்சிக்கும் விரிவுபடுத்த கோரிக்கை
- நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்
- ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு தோவாளை ஒன்றிய அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஊரக வேலை திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதிக படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மலை விளை பாசி தலைமை தாங்கினார். தங்கப்பன், மோகன், மிக்கேல்,லட்சுமி, விஜயகுமார் மற்றும் நிர்வா கிகள் முன்னிலை வைத்தனர். ஆர்ப்பாட்டத்தை மாநில செயலாளர் சின்னத்துரை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.
சி.ஐ.டி.யு.மாவட்ட செயலாளர் தங்க மோகனன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில குழு உறுப்பினர் ராஜா தாஸ், மாவட்ட துணை தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் கிறி சாந்து மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் கண்ணன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.






