என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்
- குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.
மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அவர் கேட்டார். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்படுத்தப் பட்டு வரும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ரூ.பல லட்சம் செலவு செய்து பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். ஆனால் அதில் உள்ள கழிவுகளை ரோட்டில் விடுகிறார்கள். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தமிழக முதல்-அமைச்சர், மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.
ஆணையாளர் ஆனந்த மோகன், திட்ட அதிகாரி பாபு மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்